full screen background image

காதலை உணர வைக்கும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ திரைப்படம்..!

காதலை உணர வைக்கும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ திரைப்படம்..!

சென்னை புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எழில் இனியனின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – சென்னை புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் – எழில் இனியன், ஒளிப்பதிவு – ராஜதுரை MA., சுபாஷ் N.மணியன், இசை – ஜி.கே.வி., படத்தொகுப்பு – ராஜ்குமார், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், பயர் கார்த்திக், டிசைனிங் – ரெடிஸ் மீடியா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாஸ் ரவி, பத்திரிக்கை தொடர்பு – குமரேசன்.

காற்றை யாரும் பார்க்க முடியாது… உணர மட்டும்தான் முடியும். அதேபோல், காதலையும் கருப்பா, சிவப்பா என்று பார்க்க முடியாது.. சுவாசிக்கத்தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது.

வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என அனைத்து கமர்ஷியல் அம்சத்துடனும் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் படமாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Our Score