குறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரையுமே அதில் பண்டிதர்கள் என கூறலாம்.
“திரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைகிறது.
Vision I medias நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்துக்கு “காதலில் தேடி நித்யா-நந்தா” என்று பெயர் வைத்துள்ளனர்.
அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத் தொகுப்பில், லால்குடி இளையராஜா கலை அமைப்பில். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகன், இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகள் மேற்கொண்டு உள்ளார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “இந்த படத்தின் நாயகன், நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதை என்பதால்தான் இந்த “காதலை தேடி நித்யா நந்தா” என்ற தலைப்பே வைத்துள்ளோம்.
வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். விரைவில் படம் பற்றிய தொடர் அறிவிப்புகள் வரும். இந்தப் படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்..” என்றார்.









