இயக்குநர் செல்வபாரதியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ படத்தில் இந்தக் கால இளசுகளின் செல்போன் ‘கடலை’யை, மையமாக வைத்து ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் யுவன் ஹீரோவாகவும், சரண்யா மோகன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். கானா பாலா, இமான் அண்ணாச்சியும் கூடவே வருகிறார்களாம்.. பூபதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா எடிட்டிங் செய்ய.. சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். சென் மூவிஸ் சார்பில் தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி.
இந்தப் பாடலை கானா பாலாவே எழுதி, பாடியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாடலின் துவக்க வரிகள் இதுதான்.. “நோக்கியோ பையன்.. சாம்சங் பொண்ணு, டொகோமா சிம்மு.. ரொமான்ஸ் பண்றாங்க..” இந்தப் பாடல் காட்சியில் கானா பாலாவும், இமான் அண்ணாச்சியும் கூடவே ஆடி நடித்திருக்கிறார்கள்.
பாடல் படமாகக்ப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், இந்தப் பாடல் நிச்சயம் இந்தாண்டு பேசப்படக் கூடிய பாடலாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.