full screen background image

54-வது உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் தேர்வு .

54-வது உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் தேர்வு .

இந்த வருடம் கோவாவில் நடைபெறவுள்ள 54-வது உலக திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக ‘காதல் என்பது பொதுவுடமை’ என்கிற தமிழ்ப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தினை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநரான ஜியோ பேபி வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், அனுஷா மற்றும் தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், இசை – கண்ணன் நாராயணன், பாடல்கள் – உமாதேவி, படத்தொகுப்பு – டேனி சார்லஸ், கலை இயக்கம் – ஆறுசாமி, உடைகள் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பு – ராஜேஷ் சுசீந்திரன், தயாரிப்பு – ஜோமோன் ஜேக்கப், நித்யா அற்புதராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சஜின் s ராஜ். பத்திரிக்கை தொடர்பு – குணா.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ‘லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். 

இந்தக் ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் இது ஒரு நவீன காதல் கதையாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், மன ஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது.

வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதிவரை கோவாவில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்திய மொழிகளில் பங்கு பெற்ற 408 படங்களில் 25 படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் இந்தக் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்ற படமும் ஒன்றாகும்.

Our Score