வின் பிக்சர்ஸ் சார்பில் A.R. மெளலீஸ்வர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தண்டபாணி, யு.ராமசாமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’.
படத்தில் சூரியவர்மன், ராஜா, ஜிகாத், நிஷா, நந்தினி, பழனி, ஷேக், ரவி, ராஜா அப்பாசாமி, அண்ணாமலை உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
நடன இயக்கம் – ராஜி, வசந்த், ஸ்டாலின். திரைக்கதை, பாடல்கள் எஸ்.கே.அம்மா சிவா, கதை, வசனம் – சி.சக்தி, இசை – சதா, கோகுல கிருஷ்ணன், ஒளிப்பதிவு – வாசன் ரமேஷ், இயக்கம் – சக்திவேல், தயாரிப்பு – தண்டபாணி, யு.ராமசாமி,
படம் பற்றி இயக்குநர் சக்திவேல் பேசுகையில், “நானே தர்மன்; நானே எமன்’. இதனை மைய கருவாகக் கொண்டு உருவாகிறது இத்திரைப்படம்.
பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களில் சுற்றி திரியும் காதலர்களை தேடி பிடித்து கொலை செய்கிறான் ஒரு மர்ம மனிதன்.
‘காதல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் காதலர்களை கொலை செய்வது அதைவிட ரொம்பவே பிடிக்கும்…’ என்கிறான் அந்த மர்ம மனிதன். இவன் ஏன் இப்படி செயல்படுகிறான் என்ற பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
ஒரு படம் என்றால் அதில் நாயகன், நாயகி இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள்தானே..? ஆனால், இந்தப் படத்தில் நாயகனும் இல்லை.. நாயகியும் இல்லை. இப்படி ஒரு புதிய பாணியும் இத்திரைப்படத்தில் உள்ளது.
இத்திரைப்படம் வேலூரைச் சுற்றியுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், லத்தேரி பகுதிகளில் வேகமாக வளர்ந்து வருகிறது…” என்றார்.