full screen background image

நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’..!

நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’..!

டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.

இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் மூவரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார்.

இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும் படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

VP & Dir M.A Bala

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.பாலா.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

மேலும், “நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்…” என்று படக் குழுவினரை வாழ்த்தினார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இத்திரைப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

Our Score