full screen background image

லீ பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்

லீ பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்

லீ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லீ வருண் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’.

ஒளிப்பதிவு – ரத்னகுமார், இசை – ஜெய்கிரிஷ், படத் தொகுப்பு – ரமேஷ்பாபு, மக்கள் தொடர்பு – தியாகராஜன்.P.

வித்தியாசமான தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் R.விக்கி இயக்குகிறார்.

ambu aim pandraan; justu missing movie poojai

படம் பற்றி இயக்குநர் விக்கி பேசும்போது, “ஒரு பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை இது. வாழ்வியல் எதார்த்தத்துடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்..” என்கிறார்.

இந்த ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் இனிதே துவங்கியது.

Our Score