full screen background image

‘தீரன்’ கார்த்தி வெளியிட்ட ‘காளிதாஸி’ன் பர்ஸ்ட் லுக்..!

‘தீரன்’ கார்த்தி வெளியிட்ட ‘காளிதாஸி’ன் பர்ஸ்ட் லுக்..!

சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குநர்கள், புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்று வருகிறார்கள்,

இதற்கு அடிப்படையாக அமைந்த ‘நாளைய இயக்குநர்’  நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் இயக்கநருமான சிவநேசனின் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட  இயக்குநரான செந்திலின்  புதிய முயற்ச்சியாக நடிகர் பரத் முற்றிலும் புதிய தோற்றத்தில்  தோன்றும் திரைப்படம் ‘காளிதாஸ்.’ 

இந்தப் படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்துள்ளார். ‘தானா சேர்ந்த கூட்ட’த்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Kaalidas poster

நாயகியாக மலையாள நடிகை  அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில்  கண்ணாதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.

இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, பாடல்கள் – தாமரை, தயாரிப்பு – தினகரன்.M சிவனேசன். M.S,

போலீஸ் திரில்லர் கதையில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய படத்தின் தலைப்பு  மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ் மூவரும் இணைந்து வெளியிட்டனர்.

பெறும் எதிர்ப்பார்ப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Our Score