full screen background image

30 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேரும் கே.பாக்யராஜ்-ஐஸ்வர்யா கூட்டணி..!

30 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேரும் கே.பாக்யராஜ்-ஐஸ்வர்யா கூட்டணி..!

K.பாக்யராஜ்-ஐஸ்வர்யா ஜோடி,  30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்..!

Olympia Movies நிறுவனத்தின் தயாரிப்பாளரான  S.அம்பேத்குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார். இவர் தனது 4-வது படத்தைத் துவக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாகவும், நடிகை அபர்ணா தாஸ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் ‘முதல் நீ முடிவும் நீ’ படப் புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – கே.எழில் அரசு, இசை – ஜென் மார்ட்டின், படத் தொகுப்பு – கதிரேஷ் அழகேசன், கலை இயக்கம் – சண்முகராஜ், உடைகள் வடிவமைப்பு – சுகிர்தா பாலன், நிர்வாகத் தயாரிப்பாளர் – A.P.V.மாறன், ஒலி வடிவமைப்பு – அருணாச்சலம் சிவலிங்கம், எழுத்து, இயக்கம் – கணேஷ் கே.பாபு.

ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள்  நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு,  மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக  நடந்து வருகிறது.

பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே  எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய ஒரு அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் நாயகன் கவினின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 1992-ல் வெளிவந்த ‘ராசுக்குட்டி’ என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

Our Score