‘காற்றின் மொழி’ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா..! 

‘காற்றின் மொழி’ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா..! 

‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யுலில் முடித்தார் நாயகி ஜோதிகா. ஜூன் 4-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஜூலை 25-ம் தேதியோடு தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துக்கொண்டார் ஜோதிகா.

‘தும்ஹாரி சுலு’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்தான் இந்த ‘காற்றின் மொழி’ திரைப்படம். ஹிந்தியில் தேசிய விருது பெற்ற வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார். ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மொழி’ திரைப்படத்தின் இயக்குநரான ராதா மோகன் தமிழுக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில்  ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தான் கலந்து கொண்ட ஷூட்டிங்கின் கடைசி நாளன்று படக் குழுவினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் எல்லோருக்கும் பட்டு சேலை மற்றும் வேஷ்டியை பரிசாக வழங்கிவிட்டு எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகை ஜோதிகா.

சிறப்பாக செயல்பட்ட இயக்குநர் குழுவுக்கு ஸ்பெஷல் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் ஜோதிகா. பரிசுகளை பெற்ற  படக் குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி.

IMG_5485

இந்தப் படத்தில் பணியாற்றியது குறித்து பேசிய நாயகி ஜோதிகா, “இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் சிறந்த யூனிட்.  மீண்டும் இயக்குநர்  ராதாமோகன் யூனிட்டோடு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இப்படம் தந்துள்ளது. மிகச் சிறந்த கதை , கதாபாத்திரம் என்று அனைத்தும் இப்படத்தில் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது சந்தோசம். பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை தரும் படமாக இது இருக்கும். அந்த அளவுக்கு இப்படத்தில் பெண்களை மிக உயர்வாக காட்டியுள்ளார்கள்…” என்றார்.

ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தந்த ஜோதிகாவுக்கு தயாரிப்பாளர் தனஞ்சயனும் , இயக்குனர் ராதாமோகனும் நன்றி கூறினார்கள்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்றது. படத்தை ஆன் லைன் முறையில் எடிட் செய்ததால் உடனுக்குடன் படம் தயாராகி தற்போது டப்பிங்க்கு தயாராக உள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் டப்பிங் பணிகள் துவங்கவிருக்கின்றன.

அதேபோல் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வருகிற செப்டெம்பர் மத்தியில் சென்சார் செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் பூஜை கால விடுமுறையில் வெளியாகும் என்கிறது படக் குழு.

Our Score