இயக்குநர் இரட்டையர்களான ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ‘ஜம்போ 3D’ திரைப்படத்தின் பெயர் தற்போது ‘ஜம்புலிங்கம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. MSG மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் G.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த K.ஒகிடா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
“இந்த ‘ஜம்புலிங்கம்’ திரைப்படம் முற்றிலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக ‘விசில் போடு’ என்ற புரொமொ பாடலை வெளியிட்டுள்ளோம். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார் இயக்குநர் ஹரீஷ்.
Our Score









