full screen background image

பேய் சீசன் முடிந்து நாய் சீசன் துவங்குது..!

பேய் சீசன் முடிந்து நாய் சீசன் துவங்குது..!

ரீச் மீடியா சொல்யூஷன்  மற்றும் சஹானா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஜூலியும் நாலு பேரும்’

பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை இப்படத்தின் இயக்குநருக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டி.வி. புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்பவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு – கே.ஏ.பாஸ்கர், இசை – ரகு ஸ்ரவன் குமார்.

Director Satheesh.R.V

இந்தப் படம் குறித்து அறிமுக இயக்குநரான சதீஷ்.R.V கூறுகையில், “அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட  Beagle  வகையை சேர்ந்த லக்கி என்ற நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ. இந்தப் படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்..” என்றார்.

Our Score