full screen background image

2 திரைப்படங்களை ஒரே நாளில் வெளியிடும் தில்லான தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்..!

2 திரைப்படங்களை ஒரே நாளில் வெளியிடும் தில்லான தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்..!

ஒரு படத்தை தயாரித்து வெளியிடவே மூச்சு திணறிவிடுகிறது. இப்போது ஒரே நாளில் தான் தயாரித்த 2 திரைப்படங்களை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தத் தயாரிப்பாளர் எப்பேர்ப்பட்ட பந்தயக் குதிரையாக இருக்க வேண்டும்..?

JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார்தான் இந்த தைரியமான குதிரைக்காரர்.

அருள்நிதியின் நடிப்பில் நகைச்சுவை படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும்  ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் மற்றும் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற   ‘குற்றம் கடிதல்’  ஆகிய இரண்டு திரைப்படங்களையும் வரும் ஜூன் 19-ம் தேதி ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளார் சதீஷ்குமார்.  

தயாரிப்பாளர் JSK சதீஷ்குமாரின் இந்த தைரியமான முடிவு இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.  இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு பாணிகளை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Naalu-Police-um-Nalla-Iruntha-Oorum-Film

NJ ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு புதிதான கதைக்களத்தில் அமைந்த நகைச்சுவை திரைப்படம். நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களைப் பற்றி  நகைச்சுவையாக விவரிக்கிறது இந்தப் படம்.

Kuttram-Kadithal-Movie-New-Poster

சென்ற ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற படம் ‘குற்றம் கடிதல்.’ எனினும் விருதுகளை வெல்லும் ஒரு சராசரி கலைப்படமாக இல்லாமல். விறுவிறுவென நகர்ந்து செல்லும், நெஞ்சை படபடக்க வைக்கும் ஆழ்ந்த சமூக கருத்துடன் கூடிய ஒரு த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. ‘குற்றம் கடிதல்’ ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

“இந்த திடீர் முடிவு ஏன்..?” என்ற கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார், “நல்ல திரைப்படங்களை வரவேற்று ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய இரண்டு நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை ஜூன் 19-ம் தேதி வெளியிடுகிறோம்…” என்றார்.

நிச்சயம் தைரியமான முடிவுதான்..!

Our Score