ஜே.எஸ்.கே. நிறுவனம் யுடியூபில் வெளியிடவுள்ள தமிழ்த் திரைப்படம்..!

ஜே.எஸ்.கே. நிறுவனம் யுடியூபில் வெளியிடவுள்ள தமிழ்த் திரைப்படம்..!

தமிழ்ச் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் படத் தயாரிப்பு, வெளியீடு இவற்றையும் தாண்டி டிஜிட்டல் வெளியீட்டிலும் இறங்கியுள்ளது.

படத்தின் டிவிடிக்களை வெளியிட்டால் அது உடனுக்குடன் திருட்டு விசிடியாக வெளிவரும் அபாயம் இருப்பதால் ஒரிஜினல் டிவிடிக்களின் விற்பனையும் இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு திரைப்படத்தை யூடியூபில் அதன் தயாரிப்பு நிறுவனம் அல்லது விற்பனை உரிமை உள்ள நிறுவனமே வெளியிடுவதை ஏற்கெனவே பாலிவுட்டில் நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்.

இப்போது தமிழில் ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் அதனைச் செய்கிறது. தன்னிடம் வெளியீட்டு உரிமையுள்ள வேலு பிரபாகரன் இயக்கிய ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ என்கிற திரைப்படத்தை நாளை முதல் யூடியூபில் வெளியிடவிருக்கிறார்கள்.

ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளமான https://www.youtube.com/JSKFilmCorp இந்தத் தளத்தில் அந்தப் படம் வெளியாகவுள்ளது. 

மேலும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனக்குச் சொந்தமாக ஒரு ஆடியோ நிறுவனத்தையும் துவக்கியுள்ளது. ஜே.எஸ்.கே. ஆடியோ என்ற அந்த நிறுவனத்தின் மூலம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்கிற படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்தத் திட்டம்தான். காலம் மாறும்போது நாமளும் அதற்கேற்றாற்போல் மாறித்தான் ஆக வேண்டும். அதுதான் நமக்கும் நல்லது..!

Our Score