நடிகை ஜோதிகா 8 வருட கால இடைவெளிக்கு பின்பு இன்று மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார்.
இன்று புதுடெல்லியில் துவங்கிய ‘How Old Are You’ மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கத் துவங்கிவிட்டாராம். இதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார்.
மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். தயாரிப்பது ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்தான்..!
இதன் முதல் ஷூட்டிங் காட்சியாக டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடமிருந்து ஜோதிகா விருது வாங்குவது போன்ற காட்சியை இன்று காலையில் இருந்து எடுத்து வருகிறார்கள்..!
‘ஜோ’-வை வருக வருக என்று வரவேற்கிறோம்..