full screen background image

கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்-1-ம் தேதி வெளியாகிறது

கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்-1-ம் தேதி வெளியாகிறது

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்-1-ம் தேதியன்று வெளியாகிறது!

தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அவருடைய இயக்கத்தில் தயாராகி, எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் ஆவலோடு காத்திருந்த திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’.

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

படத்தில் பிக்பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பேசும்போது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10-12 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம் இது.

ஆக்‌ஷன் காட்சிகளை ‘ஜவான்’, ‘சிட்டாடல்’ புகழ் யானிக் பென் கோரியோகிராஃப் செய்திருக்கிறார். கிளாஸி ஆக்‌ஷன் படமாக இது வந்திருக்கிறது.

‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்தபோதுகூட ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் வேறொரு ஜானரில் என்னை தகவமைத்துக் கொண்டேன்.

அதுபோல, இந்தப் படமும் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்க்ஸ்டரிடம் இருந்து கதாநாயகியை நாயகன் ஜோஷ்வா எப்படி இமை போல காப்பாற்றுகிறான் என்பதை முழுக்க, முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளேன். இந்தப் படத்தின் மூலம் என்னால் முழுக்க, முழுக்க ஒரு ஆக்‌ஷன் படத்தைக் கையாள முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன்” என்றார்.

இத்திரைப்படம் வரும் மார்ச்-1-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது..!

Our Score