“ஜிகினா’ நிச்சயம் வெற்றி பெறும்..” – ஹீரோ விஜய் வசந்தின் நம்பிக்கை.

“ஜிகினா’ நிச்சயம் வெற்றி பெறும்..” – ஹீரோ  விஜய் வசந்தின் நம்பிக்கை.

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ‘ஜிகினா’ படம் பற்றி நம்பிக்கையுடன் பேசுகிறார் படத்தின் ஹீரோவான விஜய் வசந்த்.

“இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினையான சமூக வளைத்தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதைதான் இந்த  ‘ஜிகினா’ திரைப்படம். 

இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பதுதான்   குணத்தையே நிர்ணயம் செய்யும்  என்ற எண்ணத்தில்தான் பலரும் உள்ளனர். கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களைவிட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதைக் குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம்  மற்றவரை கவர நினைக்கும் ஒரு இளைஞனைப்  பற்றியக் கதைதான் ‘ஜிகினா’ திரைப்படம்.

‘ஜிகினா’ திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் வெளியிட இருப்பதே எனக்கு மிகப் பெரிய பெருமை. அதற்காக லிங்குசாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல. 

என்னுடையக் கதாபாத்திரத்தை  இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி  மிக அருமையாக வடிவமைத்துள்ளார். ரசிகர்களிடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு. என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இத்தகைய கதாபாத்திரம் மிக பெரிய வரமாகும்.

நமது வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட facebookதான் , ‘ஜிகினா’வின் முக்கிய கதாபாத்திரம். ‘ஜிகினா’ இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்பதிலும், வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றிப் பெறும் என்பதிலும் எனக்கு சந்தேகமே இல்லை..’ என்று  தன்னம்பிக்கையோடு கூறினார்  விஜய் வசந்த். 

Our Score