செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ்.வாசன் தயாரித்து, அவரே நாயகனாக நடிக்கும் படம் ‘ஜெனீஃபர் கருப்பையா’. (ஹீரோ, ஹீரோயின் புகைப்படங்களை பார்த்தாலே இந்த டைட்டில் பொருத்தம் உங்களுக்கே புரியும்)
ராஜ்கிரண், ரேவதி நடித்த ‘தலைமுறை’ படத்தை இயக்கிய சரவண பாண்டியன் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு இயக்கும் இப்படத்தில் நாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்முரளி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் தம்பி கோட்டா சங்கர்ராவ் வில்லனாக அறிமுகமாகிறார்.
வேணுகோபால் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிஷோர் இசையமைக்க, அண்ணாமலை பாடல்களை எழுதுகிறார்.
படம் குறித்து இயக்குநர் சரவணபாண்டியன் கூறுகையில், “நிரந்தரமான வேலையில்லாமல் தினமும் வேலை செய்து வாழ்க்கையை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண நிலையிலுள்ள ஒருவருக்கு, வாழ்க்கை வசதி வரும்பொழுது அவரது மனநிலையில் எப்படியெல்லாம் மாற்றங்கள் வரும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..” என்றார்.
குற்றாலம், ராஜபாளையம், திருநெல்வேலி போன்ற இடங்களில் 40 நாட்களில் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவைந்துள்ளது. படத்தின் பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் முடிவடைந்து, இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று வருகிறது.