இளையராஜா இசையமைக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ திரைப்படம்..!

இளையராஜா இசையமைக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ திரைப்படம்..!

தமிழ்த்திரை விருட்சம் சார்பாகத தமிழ்மணி தயாரிக்கும் இந்த முதல் படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் நடிக்கிறார்கள். நாயகியாக நட்சத்திரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாழை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருகின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ஜெயகுமார்.ஜெ. இவர் இயக்குனர் வேலுபிரபாகரன், ராம்கிரிஷ் மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே இசையமைப்பதற்கு ஒத்துக் கொண்டாராம் இசைஞானி இளையராஜா. இப்போதெல்லாம் இளையராஜா இயக்குநர் யார் என்பதை பார்த்துதான் படங்களை ஒத்துக் கொள்கிறார். அந்த வரிசையில் இந்தச் சின்ன பட்ஜெட் படத்திற்கு அவர் இசையமைக்க ஒத்துக் கொண்டது என்னுடைய பாக்கியம் என்கிறார் இயக்குநர்.

பாடல்களை மு.மேத்தா எழுதுகிறார். ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன். படத் தொகுப்பு – முத்து முனியசாமி. சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, மக்கள் தொடர்பு – நிகில்முருகன்.

இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், அரியலூர் மாவட்டம் மருங்கூர்குவாகம், தாமரைப்பூண்டி கிராமப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

“திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டுமே காதல் அல்ல; திருமணத்திற்குப் பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது…” என்பதுதான் படத்தின் கதையாம்..!

இசைஞானி ஓகேதான்.. ஆனால் இதுல பவர் ஸ்டார் வேற இருக்காரே..? ஆடியோ ரிலீஸ்ல.. பிரஸ் மீட்ல படுத்தி எடுத்திருவாரே..? இசைஞானி இவரை எப்படி சமாளிக்கப் போறாரோ..???

Our Score