ஜெயம் ரவி, திரிஷா நடித்த ‘பூலோகம்’ டிசம்பர் 24-ல் ரிலீஸ்..!

ஜெயம் ரவி, திரிஷா நடித்த ‘பூலோகம்’ டிசம்பர் 24-ல் ரிலீஸ்..!

ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகும் என்று திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த இந்தப் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் பிரகாஷ்ராஜ், ஹாலிவுட் நடிகை ஜோன்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரான கல்யாண கிருஷ்ணன் பட்த்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் 2013-ம் ஆண்டே தயாராகிவிட்டது. ஆனால் ‘ஐ’ படத்தின் தயாரிப்பில் தனது அனைத்து பணத்தையும் முதலீடு செய்துவிட்டதால். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஆஸ்கர் ரவிச்சந்திரனால் முடியாமல் போய்விட்டது.

மேலும் இதற்கு முன்பே தயாரிக்கப்பட்ட ‘வல்லினம்’, ‘மரியான்’, ‘திருமணம என்னும் நிக்காஹ்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்ததாலும் இந்த ‘பூலோகம்’ படத்தை வெளியிட முடியாமல் தவித்து வந்தார் ரவிச்சந்திரன்.

இடையில் வருமான வரி சோதனை.. வங்கி கடன் தீர்ப்பாயத்தில் வழக்கு.. சீல் வைப்பு என்று பல்வேறுவிதமான பிரச்சனைகளால் இந்தப் படம் பற்றி இதன் ஹீரோ ஜெயம் ரவியே மறந்து போயிருந்தார்.

இதற்கிடையில் ஜெயம் ரவியும் இந்தப் படத்தில் நடித்து முடித்த பின்பு, ‘நிமிர்ந்து நில்’, ‘சகலகலாகவல்லவன்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’ ஆகிய 4 படங்களில் நடித்து அவையும் திரைக்கு வந்துவிட்டன.

boologam-poster-3

இந்த நேரத்தில் திடீரென்று ‘பூலோகம்’ படத்தை வரும் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு கொண்டு வருவதாக தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அறிவித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தப் படம் வடசென்னை பகுதியில் மிக பிரபலமான குத்துச்சண்டை போட்டியை மையமாகக் கொண்டது. ஜெயம் ரவி ‘பூலோகம்’ என்கிற குத்துச்சண்டை வீரராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம்.

Our Score