‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகர் சிரஞ்சீவி..!

‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகர் சிரஞ்சீவி..!

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றி பெற்ற 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சிவீ  நடிக்கவிருக்கிறாராம்.

நடிகர் சிரஞ்சீவி தற்போது அரசியலில் தீவிரமாக இருக்கிறார். தனியாக பிரஜா ராஜ்யம் கட்சியை நடத்தி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளைக் கைப்பற்றினாலும், தொடர்ந்து கட்சியை நடத்த முடியாமல், காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துவிட்டார். அக்கட்சியின் மூலமாக கடந்த மத்திய ஆட்சியில் மத்திய மந்திரி பதவியையும் வகித்தார். இப்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்குகிறார்.

அவர் அரசியலில் குதித்த பின்பு படங்களில் நடிக்கவி்லலை. கடைசியாக தனது மகன் ராம்சரண் தேஜா நடித்து இந்தாண்டு வெளியான 'புருஸ்லீ தி பைட்டர்' படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருந்தார்.

இப்போது அவரே கதாநாயகனாக முழு நீளப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இது அவரது 151-வது படம். இந்தப் படம் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கத்தி' படம்தான் என்று சிரஞ்சீவிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை சிரஞ்சீவியே தனது சொந்த பேனரில் தயாரிக்கிறாராம். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வி.வி.விநாயக் இப்படத்தை இயக்கப் போகிறார்.

'கத்தி' படம் விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி பேசிய படம் என்பதால் சிரஞ்சீவிக்கு அரசியல் ரீதியாகவும் இது பயன்படும் என்பதால் இந்தப் படத்தைத் தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

எப்படியோ ஒரு நல்ல படம், நல்லபடியாக மக்களை சென்றடைந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்..!