ஜெயம் ரவி-இயக்குநர் விஜய் கூட்டணி வைக்கும் படம் துவங்கியது

ஜெயம் ரவி-இயக்குநர் விஜய் கூட்டணி வைக்கும் படம் துவங்கியது

ஜெயம் ரவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது 

விநாயகர் சதுர்த்தியை மகிழிச்சியுடன்  கொண்டாடி வரும் இந்த நாளில், ஜெயம் ரவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது.

‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பான இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, இயக்குநர் விஜய், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குநர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தம்பி ராமையா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ  உட்பட ஒட்டு மொத்த படக் குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

தமிழ் சினிமாவின் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த பெயரிடப்படாத திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’,  உள்ளத்தில் உள்ளதை மிக அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குநர் விஜய், ரசிகர்களின் ரசனைகளை பூர்த்தி செய்வதற்காக எந்த மாதிரியான முயற்சியையும் எடுக்கும் ஜெயம் ரவி, எழில் மிகு காட்சிகளால் படத்திற்கு உயிர் கொடுக்கும்  ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு(திரு) என வலுவான கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படம், திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Our Score