Cheers Entertainments நிறுவனம் தயாரித்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மலையாள திரைப்படம் மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது..!
Cheers Entertainments சார்பில் தயாரிப்பாளர்கள் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஹீரோவான பாசில் ஜோசப், மின்னல் முரளி படத்தின் மூலம் பிரபலமானவர் என்பதும், நாயகியான தர்ஷனா ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
ஒளிப்பதிவு – பப்லு அஜு, இணை எழுத்து – நஷித் முகமது ஃபேமி, படத் தொகுப்பு – ஜான் குட்டி, இசை – அங்கித் மேனன், சண்டை பயிற்சி இயக்கம் – பெலிக்ஸ், கலை இயக்கம் – பாபு பிள்ளை.
அனைவரும் ரசிக்கும்படியாக முழுமையான குடும்ப திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படம் ராஜேஷ் & ஜெயா தம்பதியினரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்களுக்குள் நிகழும் கதையை சொல்கிறது.
மிகவும் அவசியமான ஒரு சமூகப் பிரச்சினையை அசத்தலான நகைச்சுவையுடனும், அனைத்து தாக்கங்களுடனும் எடுத்துச் சென்றதில் இயக்குநர் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார்.
இந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படம் கடந்த மாதம் 28-ம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. கேரளாவில் முதல் நாளிலேயே இப்படம் சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் இந்த ஆண்டில் (2022) மலையாள சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறி சாதனை படைத்து வருகிறது. கேரளா மற்றும் GCC-யின் ஆரம்ப வெளியீட்டில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35 கோடிகளை வசூலித்துள்ளது.
தற்போது மேலும் இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.









