யோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது

யோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது

திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரமான ‘ஜாம்பி’ திரில்லராகவும், காமடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தது. பிற்காலத்தில் இந்த ‘ஜாம்பி’ காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும்  போற்றப்பட்டது. இந்த ‘ஜாம்பி’யை வைத்து முதன் முறையாக தமிழில் படத்தை தயாரிக்கிறார்கள்.

'ஜாம்பி' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'எஸ் 3' பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் யோகி பாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

IMG_3358

யூட்யூப்(youtube) ‘பரிதாபங்கள்’  புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்ட் படமான ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்த T.M..கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் ‘நண்பன்’, ‘இன்று நேற்று நாளை’, ’தில்லுக்கு துட்டு’, ‘செக்க செவந்த வானம்’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர்.

மேலும் மனோபாலா,  ‘கோலமாவு கோகிலா’ அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், ‘மியூசிக்கலி’ புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இசை - பிரேம்ஜி, ஒளிப்பதிவு - விக்ரம் மோகன், கலை - கண்ணன், படத்தொகுப்பு - தினேஷ், சண்டை பயிற்சி - ஓம் பிரகாஷ், இணை தயாரிப்பு - பாலா அன்பு.

இந்தப் படத்தை 'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.புவன் நல்லான் இயக்குகிறார்.

கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதைதான் நாயகனும்.. நாயகியும். வில்லனும். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் - காமடியாக இப்படம் உருவாகிறது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று காலை ஆரம்பமானது. பிரபல இயக்குநர் பொன்ராம் 'க்ளாப்' அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். நடிகர் மனோபாலா நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.