full screen background image

வித்தியாசமான கேரக்டரில் வலம்வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்..!

வித்தியாசமான கேரக்டரில் வலம்வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்..!

இயக்குநர் S.N. சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.

VVR Cinemask நிறுவனத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீப காலமாக தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே போகும் நடிகர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த டீஸரின் அமோக வரவேற்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது.

IMG_7832

இது பற்றிய பேசிய இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், “ராஜேந்திரன் சார் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டோம்.

ராஜேந்திரன் நடித்த ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ’ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘டார்லிங் ’ ஆகிய படங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் ஒரு கதாபாத்திரமாக வருவார்.

IMG_3105

ஒரு முழு நீள நகைச்சுவை படமான இந்தப் படத்தில், அவரது டயாலாக் டெலிவரியும், உடல் மொழியும் எங்களுக்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. இவரை வைத்தே டீசரை கட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம். அதன்படியே டீஸரை வெளியிட்டு இப்போது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

IMG_0079

ஒரு காட்சியில் அதிக எடையுள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு மரத்தின் மேலிருந்து கீழே குதிக்க வேண்டும் என்று சொன்னேன். டூப் போடாமல் அவரே குதித்ததால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் துளிக்கூட பொருட்படுத்தாமல் ரீ-டேக் போகலாம் என்று சொன்னார் ராஜேந்திரன். இவருடைய இந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு எனக்குக் கிடைத்த்து நான் செய்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்..” என்கிறார் நெகிழ்ச்சியோடு..!

Our Score