full screen background image

ரெஜினா கேஸண்ட்ரா நடிகரை காதலிக்கிறாரா..?

ரெஜினா கேஸண்ட்ரா நடிகரை காதலிக்கிறாரா..?

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா. இந்தப் படத்தை தொடர்ந்து, தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

தெலுங்குலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரெஜினா. இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் தரமான கதையை தேர்வு செய்து இவர் கம் பேக் கொடுத்த ‘மாநகரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரெஜினா தற்போது ‘மாநகரம்’ பட நடிகரான சந்தீப் கிஷனின் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாக கிசுகிசு எழுந்துள்ளது.

ரெஜினா கேஸண்ட்ராவின் பிறந்த தினத்திற்கு ‘மாநகரம்’ பட நடிகரான சந்தீப் கிஷன் இவரை வாழ்த்தி போட்டிருந்த பிறந்த நாள் வாழ்த்துதான் இந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இவர்கள் தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களா? என்கிற சந்தேகத்தையும் எழ வைத்துள்ளது.

சந்தீப் கிஷன் தன்னுடைய வாழ்த்தில்  “ஹாப்பி பர்த்டே பாப்பா… லவ் யூ.. நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்…” என்று கூறியிருக்கிறார். மேலும் இருவரும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Our Score