full screen background image

‘இறுதி முயற்சி’ படத்தின் டீஸரை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

‘இறுதி முயற்சி’ படத்தின் டீஸரை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இறுதி முயற்சி’.

இந்தப் புதிய படத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மேலும் விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

எழுத்து இயக்கம் – வெங்கட் ஜனா, படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யா காந்தி, இசை – சுனில் லாசர், கலை இயக்கம் – பாபு M.பிரபாகர், பாடலாசிரியர் – மஷீக் ரஹ்மான், பாடகர் – அரவிந்த் கார்ணீஸ் , புகைப்படங்கள் – மணிவண்ணன், டிசைன்ஸ் – ரெட்டாட் பவன், பத்திரிக்கை தொடர்பு வேலு.

இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் உதவியாளரான வெங்கட் ஜனா இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த ‘இறுதி முயற்சி’ திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில்  வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதைபதைக்க  வைக்கும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜானர் திரைக்கதையில், அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும்விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாகவும் உருவாகியுள்ளது. 

இந்த ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தின்  முன்னோட்டக் காணொளியை இயக்குநர் K.பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

இக்காணொளி  தற்போது, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

தற்போது இந்த ‘இறுதி முயற்சி’  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வவமாக வெளியாகும்.

Our Score