விக்ரமின் ‘இருமுகன்’ திரைப்படம் வசூல் சாதனை..!

விக்ரமின் ‘இருமுகன்’ திரைப்படம் வசூல் சாதனை..!

தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது.

நேற்றுடன் முடிவடைந்த 4 தினங்களில் இந்தப் படம் 50 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

08-09-2016 -வியாழக்கிழமை – 12.66  கோடி

09-09-2016 – வெள்ளிக்கிழமை – 10.12  கோடி

10-09-2016 – சனிக்கிழமை – 13.94  கோடி

11-09-2016 – ஞாயிற்றுக்கிழமை – 14.47  கோடி 

என்று கடந்த 4 தினங்களில் உலகம் முழுக்க இந்த ‘இருமுகன்’ வசூலித்த ஒட்டு மொத்த தொகை 51 கோடியே 19 லட்சம் ரூபாய்.

தோராயமாக 40 கோடி செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே முதலீட்டையும் தாண்டி வசூல் செய்துவிட்டதால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளரும் சந்தோஷமாக உள்ளனர்.
பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் தமிழ்நாட்டில் இந்தப் படத்தை விநியோகம் செய்திருக்கிறது.
‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரமின் இந்த ‘இருமுகன்’ படம்தான், வசூல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Our Score