full screen background image

தீபாவளியன்று வெளியாகும் ‘இஞ்சி முறப்பா’

தீபாவளியன்று வெளியாகும் ‘இஞ்சி முறப்பா’

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘இஞ்சி முறப்பா.’

இந்த படத்தில்  ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகமும், கதாநாயகியாக சோனி சிறிஷ்டாவும் நடித்திருக்கிறார்கள். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும்  ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டி பாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா , சிரி, ரகு  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –  P.R.K. ராஜு, பாடல்கள்    –  பழனிபாரதி, இசை      –     மணிசர்மா, கலை   –   ஹரி.K, நடனம்   –   சொர்ணா, ஸ்டன்ட்       –  நந்து, தயாரிப்பு    –    A.P.ராதாகிருஷ்ணன், மலர்கொடி முருகன், எழுத்து, இயக்கம்    –    S.சகா. இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம்  உதவியாளராக பணியாற்றியவர். 

“தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணனின் கதை இது. தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம். இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்..” என்கிறார் இயக்குநர் சகா.

‘வஜ்ரம்’ படத்தை தயாரித்ததுடன்  ‘சதுரன்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட  ஸ்ரீசாய்ராம் சினிமாஸ் பட  நிறுவனம்தான். இந்த ‘இஞ்சி முறப்பா’ படத்தையும் வருகிற தீபாவளியன்று உலகமெங்கும் வெளியிடுகிறது.

Our Score