ஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்

ஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்

ரசிகர்களை  தனது  உக்கிரமான நடிப்பில் 'பாகுபலி'  மற்றும் ‘ருத்ரமா தேவி’ ஆகிய படங்களின் மூலம் கவர்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, பி.வி.பி. சினிமா தயாரித்து வழங்கும் 'இஞ்சி இடுப்பழகி' மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி, பரத் மற்றும் பலர் நடிக்கும் இந்த 'இஞ்சி இடுப்பழகி' படம் வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 27-ம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  ஒரே நாளில் 1500 திரைகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தொடரும்  வெற்றிப் படங்களால் ஒரு சூப்பர்  ஸ்டாரினி அளவுக்கு உயர்ந்து  உள்ள அனுஷ்கா, இந்த ‘இஞ்சி இடுப்பழகி’ மூலம் மேலும் தன்னுடைய ஆளுமையை பதிய வைக்க இருக்கிறார்.

இதுவரை வெளிவந்த  படத்தின் First look மற்றும் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பி.வி.பி. நிறுவனத்தினர், இந்தப் படம் ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து ரசிக்கக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

பிரகாஷ்  கொவிலமுடி இயக்கத்தில், பி.வி.பி. சினிமாஸ் தயாரிப்பில், மனதை மயக்கும் மரகதமணியின் இசையில், கனிகா தில்லான் கொவிலமுடி கதை வடிவத்தில், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில், ஆர்.எஸ்.பிரசன்னாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல்களில் உருவாகியுள்ள 'இஞ்சி இடுப்பழகி'  பெரும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் படப்பிடிப்பு குழுவினர்.