full screen background image

“இயக்குநர், கேமராமேன் இருவரும் ஏமாற்றிவிட்டார்கள்!” – ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ பட தயாரிப்பாளர் குமுறல்!

“இயக்குநர், கேமராமேன் இருவரும் ஏமாற்றிவிட்டார்கள்!” – ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ பட தயாரிப்பாளர் குமுறல்!

‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்றைக்கு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பைன்ஜான், சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன், பட விநியோகஸ்தர் ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ், ஸ்டண்ட் மாஸ்டர் ‘இடி மின்னல்’ இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் பைன்ஜான், “சென்சார் போர்டு எங்களுக்கு A சர்டிபிகேட் கொடுத்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநரும், கேமராமேனும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். பலவித இன்னல்களுக்குப் பிறகு நான் இந்த படத்தை வெளியிட வந்திருக்கிறேன். பத்திரிக்கை அன்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்றார்.

சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் பேசும்போது, “சன் டிவி ஓனர் கலாநிதி மாறன் அவர்கள் பெயிண்ட் பாக்கி 5,000 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. அது உங்களுக்கு யாருக்காவது தெரியுமா..? அவர் நினைத்தால் இன்று தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 234 எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கி முதலமைச்சராக முடியும். உழைப்பால் உயர்ந்தவர் கலாநிதி மாறன். அதேபோல் இந்த படத்தின் தயாரிப்பாளர் பைன்ஜான் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். பல பேரிடம் ஏமாந்தாலும் இந்தப் படத்தை வெளியிட்டு வெற்றி பெறுவேன் என்று உறுதியாக இருக்கிறார்” என்று கூறினார்.

ஸ்டண்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ பேசும்போது, “படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான பைன்ஜான் அவர்கள் குப்பை மேட்டில் உருண்டு புரண்டு சண்டைக் காட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்” என்றார்.

‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் வெளியிடுகிறார்.

Our Score