full screen background image

ஆல்யா மானஸா-ரிஷி நடிப்பில் சன் டிவியில் வரவிருக்கும் புதிய மெகாத் தொடர் ‘இனியா’

ஆல்யா மானஸா-ரிஷி நடிப்பில் சன் டிவியில் வரவிருக்கும் புதிய மெகாத் தொடர் ‘இனியா’

சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகாத் தொடர் இனியா’.

இத்தொடரில் இனியா’வாக ஆல்யா மானஸா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருகிறார். சன் டிவியில் அவர் நடிக்கும் முதல் தொடர் இது. சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி, நாயகன் விக்ரமாக நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் மெகாத் தொடர் இதுதான்.

மேலும் சந்தான பாரதி,  பிரவீணா, L.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் B.R.விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, ‘சங்கர் குரு’ பட இயக்குர் L.ராஜா, தொரட்டி பட இயக்குநர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்தி ஆகிய ஐந்து இயக்குநர்கள் இத்தொடரில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு நிறுவனம் – சரிகம, தயாரிப்பு – B.R.விஜயலட்சுமி, கதை – சரிகம கதை இலாகா, திரைக்கதை – கலைமாமணி’ சேக்கிழார், வசனம் – மாரிமுத்து, இயக்கம் – நாராயணமூர்த்தி, கிரியேட்டிவ் ஹெட் – ப்ரின்ஸ் இமானுவேல்.

கதையின் நாயகியான இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள். ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய், தப்பெல்லாம்கூட பண்ணலாம். அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.

அவளுக்கு அப்பாவும் அக்காவும் உண்டு. அக்கா என்றால் இனியாவுக்கு உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே லட்சியம்.

ஆனால், கதையின் நாயகனான விக்ரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம்கூட பூதக் கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன்.

ப்படி எதிரும், புதிருமாய் உள்ள நாயகனும், நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும்..? யார் யாரை வெல்லப் போகிறார்கள்..? என்பதை சுவாரஸ்யமாகவும், திடீர் திருப்பங்களோடும் சொல்ல வருகிறாள் இனியா’.

இந்த இனியா’ மெகாத் தொடர் உங்கள் SUN TV-யில் வரும் டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை முதல் இரவு 9 மணிக்கு  ஒளிபரப்பாக இருக்கிறது.

Our Score