‘இந்தியன்-2’, ‘மாஸ்டர்’ படங்களின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின..!

‘இந்தியன்-2’, ‘மாஸ்டர்’ படங்களின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின..!

தமிழக அரசு அறிவித்திருந்த உத்தரவின்படி நேற்றைக்குத் தமிழ்த் திரையுலகத்தில் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் மட்டும் நடைபெறத் துவங்கின.

இதன்படி ‘இந்தியன்-2’, ‘ராங்கி’, ‘சக்ரா’, ‘டாக்டர்’, ‘மாஸ்டர்’, ‘கபடதாரி’ மற்றும் தர்மராஜ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் இன்னமும் பெயர் சூட்டப்படாத ஒரு படம், கார்த்திக் சுப்புராஜின் வெப் சீரிஸ், மற்றும் வால் வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் வெப் சீரிஸ் ஆகியவற்றின் படத் தொகுப்புப் பணிகள் தொடங்கின.

மேலும், ‘சின்னதா ஒரு பாட்டு’, ‘காதம்பரி’, ‘பென்குவின்’, ‘மேடம் கீர்’, ‘ஐ.பி.சி.176’, ‘மீனாட்சி சினிமாஸ் நிறுவன’த்தின் வெப் சீரிஸ், ஐ.எம். நிறுவனத்தின் ஒரு திரைப்படம், ‘செகண்ட் ஷோ’, ‘பூமி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களின் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “பணியின் தன்மை, பணி புரியும் ஊழியர்களின் விவரங்கள், பணி புரியும் இடம் ஆகியவற்றை அரசுக்கு அனுப்ப வேண்டியிருப்பதால்… அனைத்து சம்மேளன உறுப்பினர்களும் தங்களின் விவரம், தொழில் நுட்பக் கலைஞர்களின் பணியின் விவரம், பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் சம்மேளனத்திற்கு அனுப்பிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

fefsi-dubbing-works-starts-statement-1

 

fefsi-dubbing-works-starts-statement-2

Our Score