full screen background image

இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டுமா..?

இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டுமா..?

ஏப்ரல் 5-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த ராஜாவின் சங்கீதத் திருநாள் இசைக் கச்சேரி மேடையில் ‘இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றம்’ உருவாக்கப்பட்டதாக இந்தப் பதிவில்  குறிப்பிட்டிருந்தோம். இதன் செயல்பாடுகள் பற்றியும், உறுப்பினர் சேர்க்கை பற்றியும் அதில் கேள்வியை எழுப்பியிருந்தோம்.

இப்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. இசைஞானியின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்களாம்..

இந்த மன்றத்திற்காகவே தனியாக வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. www.isaignanifanclub.com இதுதான் அந்த வெப்சைட்டின் முகவரி.

இதனுள் சென்றால் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்ப மனுவை டவுன்லோடு செ்யயும் வசதி தரப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து.. அதனை பிரிண்ட் அவுட் எடுத்து.. அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதில்களை பூர்த்தி செய்து.. “ISAIGNANI FAN CLUB TRUST” என்ற பெயரில் 100 ரூபாய்க்கான வங்கி டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமாம்.

முகவரி :

ISAIGNANI FAN CLUB GLOBAL,

No: 3/5, Second Floor,

Gandhi Road,

Alwarthirunagar,

Virugambakkam,
Chennai – 600087.

Tamilnadu,

India.

மதுரை கச்சேரிக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் தவிர.. திரையுலகில் இருக்கும் அனைத்து பிரமுகர்களும் இப்போது இந்த மன்றத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்..!

இசைஞானியின் ரசிகர்கள் அனைவரும் ஓரணியில் சேர்வது காலத்தின் கட்டாயம்..! என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை பிறகு பார்ப்போம். முதலில் ஒன்றாவோம்.. பின்பு கூடலில் நின்று பேசி, ராஜாவின் இசையில் மகிழ்ந்து, துகிழ்ந்து அளவளாவி அவரது இசையை பரப்புரை செய்வோம்..!

Our Score