இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொழுதுபோக்கு ஓவர் தி டாப் (OTT) செயல்தளமான ZEE-5 தளத்தில், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 2020-ம் ஆண்டு மார்ச் மாதம்வரையிலும் 72 புதிய ஒரிஜினல் திரைப்படங்களை தயாரித்து வழங்கப் போவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஒரு பகுதியாக ஒரிஜினல் திரைப்படங்களின் வரிசையில் ‘இக்லூ’ என்னும் புதிய திரைப்படம் ZEE-5 தளத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் திரையிடப்பட்டுள்ளது.
இதன் லின்க் இங்கே : https://www.zee5.com/videos/details/igloo-trailer/0-0-67517
டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த ‘இக்லூ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
படத்திற்கு அரோல் கொரோலி இசையமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத் தொகுப்பு செய்திருக்கிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பு செய்ய, விஜய ஆதிநாதன் கலை இயக்கத்தை மேற்கொள்ள, செந்தில் குமரன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.
நடிகர் அம்ஜத்கான், நடிகை அஞ்சு குரியன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், மேத்யு வர்கீஸ் மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை பரத் மோகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
காதலர்களான நாயகன், நாயகி இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கைக்காக தங்களது எதிரில் இருந்த அனைத்து தடைகளையும், தடங்கல்களையும் எதிர்த்துப் போராடி திருமணத்தில் இணைகிறார்கள். ஆனால், அதன் பிறகு நாயகிக்கு திடீரென்று இரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரிய வர.. அதன் பின் அவர்களின் வாழ்க்கை என்னவாகிறது.. என்பதுதான் இந்த ‘இக்லூ’ திரைப்படம்.
நாயகி ரம்யா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக அறியப்படும் நேரத்தில் இக்கதையானது, உணர்ச்சிப்பூர்வமான ஒரு திருப்பத்தைப் பெறுகிறது. அதன் பின் ஒற்றைப் பெற்றோராக தனது இரட்டைப் பெண் குழந்தைகளை நாயகன் சிவா எப்படி வளர்க்கிறார் என்பதையும் சோகம் ததும்பிய திரைக்கதையில் சொல்கிறது இத்திரைப்படம்.
இப்படம் குறித்து நாயகன் அம்ஜத்கான் பேசுகையில், “இக்லூவின் கதையும், திரைக்கதையும் எங்களை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. காலம் முழுவதும் நிலைத்து நிற்கும் வகையில் எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்மா இல்லாத இரண்டு பெண் குழந்தைகளை செல்லமாக வளர்த்தெடுக்கும் ஒரு தந்தை கதாபாத்திரம் என்னுடையது. இத்திரைப்படம் எடுக்கப்பட்ட காலம் முழுவதிலும், இந்த இரு குழந்தைகளோடும் ஒரு ஆழமான பிணைப்பை நான் உருவாக்கிக் கொண்டேன்.
‘இக்லூ’ என்ற இத்திரைப்படம், உணர்ச்சிகள் நிறைந்த காட்டாற்று வௌ்ளம் போன்றது. இத்தகைய மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது மிக கடினமாக இருந்தது. அதேவேளையில் திருப்தியும், மகிழ்ச்சியும் அளிப்பதாக இருந்தது.
திரைப்பட ரசிகர்களும், தொலைக்காட்சி ரசிகர்களும் இணைந்து கட்டாயமாக பார்க்க வேண்டிய கதை இது. ZEE-5- ன் மிகப் பெரிய மார்க்கெட்டிங் வேல்யூ காரணமாக, இது நிகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்…” என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் பரத் மோகன் பேசுகையில், “இந்த ‘இக்லூ’ திரைப்படம் அன்பு, காதல் மற்றும் உறவுகள் குறித்த ஒரு உணர்ச்சிமயமான திரைப்படம். இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இத்திரைப்படத்தை காணும் ரசிகர்கள் அனைவருமே இத்திரைப்படம் தங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்வார்கள். பார்வையாளர்களால் அதிக வரவேற்பையும், பாராட்டுதலையும் பெறுகிற ஒரிஜினல் தமிழ்ப் படங்களை அதிகம் கொண்டிருக்கும் இந்த ZEE-5 தளத்தில், இத்திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்…” என்றார்.
ZEE-5 இந்தியா, நிறுவனத்தின் நிகழ்ச்சிகளுக்கான தலைமை அலுவலரான அபர்ணா அச்ரேக்கர், இது பற்றிப் தெரிவிக்கையில், “ஆட்டோ சங்கர்’, ‘திரவம்’, ‘போஸ்ட்மேன்’ போன்ற சமீபத்தில் வெளியிடப்பட்ட எங்களது அனைத்து தமிழ் திரைப்படங்களும் பார்வையாளர்களால் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன.
எங்களது பிராந்திய வெளியீட்டு உள்ளடக்கத்தை இன்னும் வலுவாக கட்டமைக்கின்ற குறிக்கோளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இப்போது இந்த ‘இக்லூ’ என்ற இத்திரைப்படமும், எங்களது தொகுப்பில் புதிதாக இணைந்திருக்கிறது.
பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப் போக வைக்கின்ற கதைக் களத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘இக்லூ’ திரைப்படம், ஒற்றைப் பெற்றோராக குழந்தைகளை வளர்ப்பது மற்றும் ஒரு தந்தையால் எதிர்கொள்ளப்படுகின்ற பல சவால்களை மிக நேர்த்தியாகவும், சரியாகவும் சித்தரிக்கிறது.
எங்களது தொகுப்பில் இது மிகத் தெளிவாக மாறுபட்ட ஒரு கதையாகும். எனவே, இந்த சிறப்பான படத்தை எமது பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்..” என்று கூறினார்.
ZEE-5 தளத்தின் இந்தியாவின் வியாபாரத் தலைவரான திரு. மனீஷ் அகர்வால் தனது கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ளும்போது, “எங்களது தளத்தில் இருக்கும் திரைப்படங்களின் தொகுப்பை இன்னும் வலுப்படுத்துவதற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
ரசிகர்களால் அதிகம் ரசித்து வரவேற்கக் கூடிய மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை உருவாக்கி வழங்கி வருகிறோம். இந்தத் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து எமது பிராந்திய மொழிகளுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக சில அதிரடி தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களின் அறிமுகத்தின் விளைவாக பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. நிகழ்ந்திருக்கிறது.
இப்போது தமிழ் திரைத் திரைப்படங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் இந்த ‘இக்லூ’ திரைப்படம், பல்வேறு வயது பிரிவினர்கள் மத்தியிலும் ஒரு உடனடி பிணைப்பை உருவாக்கக் கூடிய ஒரு அற்புதமான கதை…” என்று குறிப்பிட்டார்.
12 மொழிகளில், 3500-க்கும் அதிகமான திரைப்படங்கள், 500-க்கும் அதிகமான டிவி நிகழ்ச்சிகள், 4000-க்கும் அதிகமான மியூசிக் வீடியோக்கள், 35-க்கும் அதிகமான நாடகங்கள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது ZEE-5 தளம்.
ZEE-5 தளம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தனது சந்தாதாரர்களுக்காக பிராந்திய மொழிகளில் ப்ரீமியம் பேக்குகளை (தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம்) அறிமுகம் செய்தது. இவைகள், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.
தற்போது ZEE-5-ன் தமிழ் ப்ரீமியம் பேக், ஒரு மாதத்திற்கு 49 ரூபாயாகவும், ஒரு ஆண்டுக்கு 499 ரூபாயாகவும் சிறப்பான விலை நிர்ணயத்தைக் கொண்டிருக்கிறது.
ZEE-5-தளத்தில் ‘இக்லூ’ படத்திற்கான லின்க் : https://www.zee5.com/videos/details/igloo-trailer/0-0-67517