“எம்.ஆர்.ராதா ஒரு பொண்ணைத் தொட்டுவிட்டால் வீடு, நகை வாங்கிக் கொடுப்பார்” – ஏ.எல்.எஸ்.வீரையாவின் பேட்டி

“எம்.ஆர்.ராதா ஒரு பொண்ணைத் தொட்டுவிட்டால் வீடு, நகை வாங்கிக் கொடுப்பார்” – ஏ.எல்.எஸ்.வீரையாவின் பேட்டி

‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே..! நிறைய மனைவிகள், நிறைய பிள்ளைகள்.. என்று வாழ்ந்து மறைந்தவர்.

அவரது குணநலன்கள் பற்றி பழம்பெரும் தயாரிப்பு நிர்வாகியான ஏ.எல்.எஸ்.வீரைய்யா சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி, வீரைய்யா பேசும்போது, “எம்.ஆர்.ராதா அடிப்படையில் ரொம்ப நல்லவர். யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார். எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா சொல்லுவார். அதே சமயம் தப்பு நடந்தாலும் பட்டுன்னு சொல்லிருவாரு. கோபம் வந்தாலும் கண்டிப்பாரு.

அதே மாதிரி அவருக்கு அடுத்தவங்களைப் பத்தி குறை சொல்றது பிடிக்கவே பிடிக்காது. அவரோட மேனேஜர் யாரைப் பத்தியாவது அவர்கிட்ட பத்த வைச்சிக்கிட்டே இருப்பார். உடனேயே அவரை வெளில போகச் சொல்லிருவாரு. எதையும் கேட்கணும்னு விரும்பவே மாட்டாரு.

அவருக்கு நிறைய மனைவிகள்தான். அவர் அதை யார்கிட்டேயும் மறைக்க மாட்டாரு. ராதிகாவோட அம்மா கீதா இலங்கையில் இருந்து இங்க வந்தவங்க. ராதாகூட பழகினவுடனேயே கீதாவை மனைவி மாதிரியே கூட வைச்சிக்கிட்டாரு. பிள்ளைகளையும் பெத்துக்கிட்டாரு.

அவர்கிட்ட இன்னொரு நல்ல விஷயம்ன்னா.. ஒரு பொண்ணைத் தொட்டுட்டாருன்னா அப்படியே விட்டுர மாட்டாரு. அந்தப் பொண்ணுக்கு ஒரு சின்ன வீடு வாங்கிக் கொடுப்பாரு.. அப்புறம் 25 பவுன்ல நகையாவது வாங்கித் தருவாரு.. இந்த அளவுக்கு நேர்மையா இருந்தவரு எம்.ஆர்.ராதா..” என்றார் வீரைய்யா.

Our Score