full screen background image

“ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை

“ஏலே’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” – பாரதிராஜா கோரிக்கை

ஏலே’ படத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு தமி்ழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏலே’ படம் தியேட்டருக்கு வந்து 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என்னும் ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தால்தான் அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடுவோம்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு முன் வராமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அந்தச் சங்கத்தின் தலைவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, “யார் தடுத்தாலும் ‘ஏலே’ படம் வெளியாகும். மக்களைச் சென்றடையும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Our Score