நடிகர் மம்மூட்டி தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மலையாளத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் அவ்வப்போது அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பார்.
தமிழில் ராம் இயக்கத்தில் ‘பேரன்பு’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான ஒய்.எஸ்.ஆர்.சந்திரசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘யாத்ரா’விலும் நடித்திருந்தார்.
இப்போதும் வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் மலையாளத்தில் நாயகனாக நடித்து வரும் மம்மூட்டி இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது.
தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஏஜென்ட்’. இந்தப் படத்தில் இவர் ஒரு உளவாளியாக நடிக்கிறாராம். இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்தப் படத்தில்தான் மம்மூட்டி வில்லனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
படத்தின் நாயகனான அகிலின் அம்மாவான நடிகை அமலாவுக்கு ஜோடியாகவும் மம்மூட்டி நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கும் தெரியும்.