full screen background image

விஜய்யின் 66-வது படத்தில் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்..?

விஜய்யின் 66-வது படத்தில் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்..?

நடிகர் விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தேதிகள் கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற மாதம் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பினை நடத்துவதற்காக ஈவிபி பிலிம் சிட்டியில் செட்டுகள் போடப்பட்டு தயாரானாலும் கொரோனா லாக் டவுனால் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. லாக் டவுன் நீக்கப்பட்டதும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்தப் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் நடு, நடுவில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதற்குள்ளாக விஜய்யின் 66-வது படத்தை இயக்கப் போவது தெலுங்கு இயக்குநரான  வம்சி பைடி பல்லி என்ற செய்தி இறக்கை கட்டிப் பறக்கத் துவங்கியது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக உள்ளதாகவும் தகவல்.

நடிகர் விஜய்யின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. பல வருடங்களாக தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருவதால் நாம் ஏன் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கக் கூடாது என்று விஜய் நினைத்திருப்பார் போலும். அதனால்தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் படவுலகினர்.

இயக்குநர் வம்சியும் தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர்தான். ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘மகிரிஷி’, ராம்சரண் நடித்த ‘எவடு’, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘பிருந்தாவனம்’, பிரபாஸின் ‘முன்னா’ ஆகிய படங்களை இயக்கி தெலுங்குலகத்தில் தற்போது முன்னணி இயக்குராக உள்ளார்.

இவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் இந்தப் படத்தில் 2 கதாநாயகிகள் உண்டு என்றும் அதில் ஒரு கதாநாயகிக்காக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பைரவா’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் விஜய் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Our Score