full screen background image

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..!

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘இடி முழக்கம்’ திரைப்படம் தேர்வு..!

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இடி முழக்கம் திரைப்படம் பூனே இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் (Pune International Film Festival)-க்கு இந்தியா சினிமாவின் சார்பாக தேர்வாகியுள்ளது.

படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “எனது இயக்கத்தில் உருவான இடி முழக்கம் திரைப்படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வானதில் எனக்கும், எனது பட குழுவினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.

இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியுமாகும். விழாவிற்காக தகுதி பெற்ற திரைப்படம், ரசிகர்கள் மனதிலும்  இடம் பெறுவதற்கான தகுதியையும் பெரும் என்பதில் எந்தவித  சந்தேகமும் இல்லை. என்னுடைய எல்லா திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவை போல இத்திரைப்படத்திற்கும்  உங்கள் அன்பும், ஆதரவும்   கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தென்மேற்கு பருவக் காற்று’,  ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’  போன்ற பல வெற்றி திரைப்படங்களின் வரிசையில் தனித்துவமான கதைக் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த ‘இடி முழக்கம்’ திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரேயே பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது.   இந்நிலையில் இத்திரைப்படத்தின் இடை முழக்கத்தின் சத்தம் இன்னும் ஒரு படி மேலே சென்று திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பொழுது ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு தேர்வாகி உள்ளதால் படக் குழுவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Our Score