நாக சைதன்யா – பூஜா ஹெக்டே நடிப்பில் ‘லைலா ஓ லைலா’

நாக சைதன்யா – பூஜா ஹெக்டே நடிப்பில் ‘லைலா ஓ லைலா’

தென்னிந்திய திரைப்பட சகாப்தத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு சக்தியாக இப்போதும் இருந்து வருகிறார்கள். தெலுங்கில் வசூல் ராஜாவாக திகழும் நடிகர் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான  ‘ஒக்க லைலா கோசம்’ என்ற படம் தெலுங்குலகில் அமோக வெற்றிபெற்றது.

அந்தப் படமே இப்போது தமிழில்  ‘லைலா ஓ லைலா’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா நடித்திருக்கிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ரோகிணி, சுதா, ஷாயாஜி ஷிண்டே,  நாசர், பிரம்மானந்தம்,  ஆலி,  ஆசிஷ் வித்யார்த்தி,  சுப்ரீத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - I.ஆண்ட்ரு, இசை - அனூப் ரூபென்ஸ், வசனம் – ஷாஜி, எடிட்டிங் – பிரவீன், நடனம் – சேகர், எழுதி இயக்கி இருப்பவர்  - கே.விஜயகுமார், தயாரிப்பு   -  அக்கினேனி நாகார்ஜுனா.

இந்த படத்தை ஸ்ரீலஷ்மிஜோதி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் A.N.பாலாஜி வெளியிடுகிறார்.

படம் பற்றி பாலாஜி பேசும்போது, “நாகார்ஜுனா என்றாலே தெலுங்கில் ‘வசூல் ராஜா’ என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப்படுபவர். அவர் தயாரிப்பில் அவருடைய மகன் நாக சைதன்யா நடிப்பில் உருவான இந்த ‘லைலா ஓ லைலா’  படம் ஒரு ஜாலியான காதல் கதையை மையமாகக் கொண்டது.

பணக்கார வாலிபனான நாக சைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அதே பெண்ணிற்கும், நாக சைதையாவிற்கும் திருமண ஏற்பாடுகள் இரு வீட்டாராலும் பேசி நிச்சயம் செய்யப்படுகிறது.

முதலில் ஒப்புக் கொள்ளும் நாக சைதன்யா கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை நிறுத்துகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாக சைதன்யா திருமணத்திற்கு மறுக்க என்ன காரணம்..? அதுதான் படத்தின் சுவாரஸ்யம். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது..” என்றார்.