full screen background image

“எனக்குத் தேவை பெண்களின் உடல்தான்; மூளை இல்லை” – ராம்கோபால்வர்மாவின் சர்ச்சை பேச்சு

“எனக்குத் தேவை பெண்களின் உடல்தான்; மூளை இல்லை” – ராம்கோபால்வர்மாவின் சர்ச்சை பேச்சு

சர்ச்சைகளும், ராம்கோபால் வர்மாவும் கூடவே பிறந்தவை. என்றைக்கு மும்பையில் இருந்து வீட்டைக் காலி செய்து ஹைதராபாத்தில் வந்து குடியேறினாரோ.. அன்றிலிருந்து டிவிட்டரில் நாயகனாக இருக்கிறார் ராம்கோபால் வர்மா.

இந்த இடைப்பட்டக் காலத்தில் அவர் உருவாக்கிய அனைத்துத் திரைப்படங்களுமே முழுக்க, முழுக்க செக்ஸை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்தான்.

இதற்கு முன்பாக ஒரு முறை நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியுடன் நடத்திய பெண்களைப் பற்றிய ஒரு டிவிட்டர் பேச்சில் “நான் பெண்களின் உடல்களைத்தான் விரும்புகிறேன். அவர்களின் மூளையை அல்ல..” என்று சொல்லி பரபரப்பாக்கினார். இந்த வார்த்தைகளுக்காக இந்தியா முழுவதிலும் இருந்து அவருக்குக் கண்டன அறிக்கைகள் பறந்து வந்தன.

ஆனால், அசரவில்லை ராம்கோபால் வர்மா. “நானாவது தைரியமாக வெளியில் சொன்னேன். இப்போது என்னைக் கண்டிப்பவர்களின் வீட்டில் இருக்கும் ஆண்களின் மனதிற்குள் நான் சொன்னதுதான் இருக்கும். அவர்களைத் தனிமையில் கேட்டுப் பாருங்கள். நான் சொன்னதை உண்மை என்றுதான் சொல்வார்கள்…” என்று திருப்பியடித்தார் ராம்கோபால் வர்மா.

இப்போது ராம்கோபால் வர்மா திடீரென்று தனது இருப்பிடத்தை ஹைதராபாத்தில் இருந்து கோவாவிற்கு மாற்றிக் கொண்டுள்ளார். அங்கேயும் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார். அந்தப் படத்தில் நடித்த நடிகை கொடுத்திருக்கும் போஸ்களெல்லாம் சமீப நாட்களாக இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தனது புதிய படம் பற்றிப் பேட்டியளித்த ராம்கோபால் வர்மா பெண்கள் பற்றி தான் முன்பு சொன்ன கொள்கைகளில், இப்போதும் உறுதியாகவே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

“நான் இப்போதும் சொல்கிறேன். நான் விரும்புவது பெண்களின் உடல்களைத்தான். அவர்களது மூளையை அல்ல.

நம் மூளைக்கு பாலினம் இல்லை. ஒரு பெண்ணும் அதை வைத்திருக்க முடியும். ஒரு ஆணும் அதை வைத்திருக்க முடியும். ஆனால், பாலியல் அம்சங்களாகப் பார்த்தால் மிகவும் குறிப்பிட்ட கூடுதல் விஷயங்கள் பெண்களிடம்தான் இருக்கிறது, அது சிற்றின்பம் மூலமாக பிறருக்குக் கிடைக்கிறது. இதற்காகவே நான் அதைப் போற்றுகிறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.

Our Score