full screen background image

“முருங்கைக்காய் சீனை மூணு தடவை படமாக்கினேன்” – இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்

“முருங்கைக்காய் சீனை மூணு தடவை படமாக்கினேன்” – இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்

முந்தானை முடிச்சு’ படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் பற்றிய காட்சிகளை படமாக்கியவிதம் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்றைக்கு நடைபெற்ற ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

விழாவில் நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது“நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார்.  அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார்.

தரண்தான் இன்றைய நாயகன். நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவாதான் டான்ஸில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ்’ என்றவுடன் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நான் எடுத்த, அந்தக் காட்சி எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. முருங்கைகாய் காட்சியை படமாக்க நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஏனோ மூட் வரவில்லை. அதனால் அந்தக் காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன்.

இதேபோல் பரிமளம் வாந்தி எடுப்பதுபோல ஒரு காட்சியும் இருந்தது. அதன் பின்பு பரிமளத்தின் அப்பாவும், அம்மாவும் சீர் வரிசையோடு மகளைப் பார்க்க வருவார்கள். இந்தக் காட்சியும் எனக்கு அப்போது சரியாக மனதில் பிடிபடவில்லை. இதையும் ரொம்பவும் யோசித்து மூன்று முறைக்கு மேல் எடுக்க வேண்டும் என்று நினைத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கடைசியாக எடுத்தேன்.

ஆனால், இப்போது இந்தக் காட்சிகள், இத்தனையாண்டுகள் கழித்தும் மறக்க முடியாத அளவுக்கு புகழ் பெற்றிருப்பதில் எனக்கு சந்தோஷம்தான்.

சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களை பெற்றிருப்பதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் நாயகியான அதுல்யா கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதே முதலில் எனக்குத் தெரியாது. அவர் ஆங்கிலத்தில்தான் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன். பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை தூரம் ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்..” என்றார்.

Our Score