“ஷில்பா ஷெட்டியை குறித்து நானும் கவலைப்பட்டேன்”-ஆபாச பட வழக்கில் புகார் செய்த ஷெர்லின் சோப்ராவின் வருத்தம்

“ஷில்பா ஷெட்டியை குறித்து நானும் கவலைப்பட்டேன்”-ஆபாச பட வழக்கில் புகார் செய்த ஷெர்லின் சோப்ராவின் வருத்தம்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் போன் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ரா மீதும், ஆபாச பட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘Hot Shots’ என்ற செயலியை நடத்தும் நிறுவனத்தின் மீதும் முதன்முதலில் போலீஸில் புகார் கொடுத்தவர் பிரபல பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா.

இவரையும் இது போன்று நிர்வாணப் படத்தில் நடிக்கும்படியும், அதற்கு மிகப் பெரிய தொகையைத் தருவதாகவும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஷெர்லின் சோப்ராதான் தானே முன் சென்று மும்பை போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் விளைவாகத்தான் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ராஜ் குந்த்ரா கைது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலமாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

அதில்,  “இந்த விஷயத்தில் முதன்முதலாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தது நான்தான். மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் அழைத்ததும், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது குழந்தைகள் குறித்துதான் முதலில் எனக்கு கவலை ஏற்பட்டது.

ஆனாலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்தேன். அந்த ஆபாச பட நிறுவனம் பற்றிய உண்மைகளை போலீஸாரிடம் கூறினேன். இதில் ஒருதலைப்பட்சமாக இல்லாமல், எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன்.

இந்த விவகாரத்தில் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இது தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இது பற்றி நான் இங்கு சொல்வது சரியானதாக இருக்காது.

மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு நான் கூறிய விவரங்களை அவர்களின் அனுமதியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்..” என்று கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

Our Score