full screen background image

“நான் சிங்கிள்தான்; ஆனால் காதலிக்கத் தயார்..” – நடிகை வனிதா விஜயகுமாரின் சர்ச்சை டிவீட்..!

“நான் சிங்கிள்தான்; ஆனால் காதலிக்கத் தயார்..” – நடிகை வனிதா விஜயகுமாரின் சர்ச்சை டிவீட்..!

பரபரப்பு நடிகையான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தான் தற்போது சிங்கிள்தான் என்றாலும் அடுத்தத் திருமணத்திற்குத் தயாராக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய 2 பேரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரையும் விவாகரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கே மாதங்களில் அந்த திருமணமும் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அந்த பீட்டர் பால் எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார், பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்த வதந்திகள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது  இது குறித்து நடிகை வனிதா தனது டிவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் “நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்..” என்று பதிவு செய்துள்ளார்.

Our Score