full screen background image

“என் குரு மைக்கேல் ஜாக்சனுக்கு செய்த காணிக்கை அது” – ஹிரித்திக் ரோஷனின் பேட்டி

“என் குரு மைக்கேல் ஜாக்சனுக்கு செய்த காணிக்கை அது” – ஹிரித்திக் ரோஷனின் பேட்டி

இந்திய திரைப்பட வரலாற்றில் ‘Bang Bang ‘ ஹிந்தி திரைப்படம் மிக முக்கியமான் படமாக கருதப்படுகிறது. பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்பட்டிருப்பதும், மிகப் பெரிய அளவிலான விளம்பரங்களும் இந்தப் படத்தை சர்வதேச அளவில் இந்திய படங்களுக்கான வர்த்தகத்திற்கு ஒரு தனி இடத்திற்கு கொண்டு போயுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் படம் பற்றி ஹீரோ ஹிரித்திக் ரோஷன் பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அப்போது, “நான் எப்பொழுதும் சவாலை விரும்புகிறவன். அந்த வகையில் எனக்கு இந்த ‘Bang Bang ‘ சரியான படமாக அமைந்திருக்கிறது. ஒரு commercial படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கின்றன . காதல், அதிரடி சண்டை காட்சிகள், இசை, சாகசம் என ரசிகர்களை கவரும் எல்லா அம்சங்களும் நிறைய பெற்ற படம் இது. இந்த படத்தின் சண்டை காட்சிகள் நான் இதுவரை செய்யாதது. நான் மட்டுமல்ல எந்த ஹீரோவும் செய்யவில்லை என்றே கூறலாம்.

உயரமான மாடியில் இருந்து விழும் போதும், மோட்டார் சைக்கிள் ஓட்டும் போதும், F -1 மோட்டார் கார் ஓட்டும் போதும், வாட்டர் ஸ்கையிங் எனப்படும் தண்ணீரில் ஈடுபடும் சாகசத்திலும் சரி, அல்லது Fly போர்டு வைத்து செய்த உயிருக்கு உத்திரவாதமில்லாத சண்டை காட்சியிலும் எனக்கு உதவிய படக் குழுவினரை மறக்கவே முடியாது . இந்திய திரைப்படங்களில் இப்படி ஒரு சண்டை காட்சி வந்ததில்லை என்ற பெருமை எனக்கு கிடைத்தால், அதற்கு அவர்களே காரணம்.

இந்த படத்தில் நான் ஆடியிருக்கும் மைக்கேல் ஜாக்சன் நடனம் இப்போதே மிகவும் பிரபலமாகிவிட்டது. இயக்குனர் சித் இதைப் பற்றி என்னிடம் முதன் முதலில் கூறும்போது எனக்குள்ளும் சந்தேகம் இருந்தது. நானும் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்தான். இருந்தாலும் அந்த அளவுக்கு நான் ஆட முடியுமா என்பது சந்தேகம்தான் என்று இயக்குநரிடம் சொன்னேன். அப்படியும் அவர் என்னை வற்புறுத்தவே என்னுடைய மானசீக குருவான மைக்கேல் ஜாக்சனுக்கு என்னுடைய குருதட்சணையாக இந்த நடனத்தை ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னதான் நான் எல்லா வகையான நடனத்திலும் சிறப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலும், அவரை காப்பி அடிக்காமல் அவரது பாணியிலே என்னுடைய சொந்த ஸ்டைலில் நடனம் ஆடுவதுதான் அவருக்கு செய்யம் முதல் மரியாதை என கருதி ஆடினேன். இந்த நடனம் மூலம் எனக்கு கிடைக்கும் புகழ் அனைத்துமே அவருக்கே சாரும்.

‘Bang Bang ‘ டைட்டில் music என்னை மிகவும் கவர்ந்து உள்ளது. அந்த இசைக்கு நான் கதாநாயகி கத்ரீனா கைப் உடன் ஆடிய நடனம் கூட பெரிய அளவில் பேசப்படும். கத்ரீன மிக திறமையான நடனம் ஆட கூடியவர். அவருடன் ஈடு கொடுத்து ஆடுவது மிகவும் சவாலானது. நானும் கத்ரீனாவும் ராசியான ஜோடி என்று படவுலகில் பலரும் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். அவர் மிக, மிக கடுமையான உழைப்பாளி. தொழில் பக்தி உடையவர். அவரது வெற்றிக்கு அதுதான் காரணம். எங்கள் ஜோடி பொருத்தம் ‘Bang Bang’ படத்தின் வெற்றி மூலம் மேலும் மெருகேறும்” என்றார் ஹிரித்திக் ரோஷன்.

Our Score