full screen background image

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஹூஷாரு’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஹூஷாரு’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிஜனாக இருப்பது புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான். எந்த மொழியாக இருந்தாலும் யதார்த்த படைப்புகள்தான் சினிமாவின் சக்சஸ் பார்முலா.

அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘ஹூஷாரு. ‘ஹூஷாரு’ என்றால் தமிழில் ‘புத்துணர்வு’ என்று பொருள்படும்.

இந்தப் படத்தில் Tejus Kancherla என்ற அறிமுக நாயகனும், Priya Vadlamani, Daksha Nagarkar என்னும் அறிமுக நாயகிகளும் நடித்துள்ளனர். இயக்குநர் Sreeharsha Konuganti படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த ‘ஹூஷாரு’ திரைப்படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகத்தினரின் வசூல் கணக்கு சொல்கிறது.

இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். நடிகர் ஜீவா நடித்து வெற்றி பெற்ற ‘தெனாவட்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் V.V.கதிர், 10 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கம் செய்யவுள்ளார்.

பலத்தப் போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான J.பணீந்திரகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இவர், ஏற்கெனவே பிரபு சாலமன் இயக்கத்தில் ‘லாடம்’ என்ற படத்தை தயாரித்தவர்.

புதுமுகங்களும், பல பிரபலங்களும் இணையவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராதன் இசையமைக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Our Score