full screen background image

“இந்தப் படத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” – ஹீரோயின் நந்தினியின் பூரிப்பு..!

“இந்தப் படத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” – ஹீரோயின் நந்தினியின் பூரிப்பு..!

ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரித்து வரும் பி.வி.பி. சினிமா நிறுவனம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற கூற்றுக்கு இணங்க முற்றிலும் இளம் கூட்டணியில் உருவாகும்   ‘கிரகணம்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.  

இதில் கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் , புதுமுக கதாநாயகி நந்தினி, கருணாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் இளன்  இயக்கும் திரில்லர் கலந்த இத்திரைப்படம் தனது கதையம்சத்தால் அனைவரையும் கவர தயாராகி வருகிறது.  பி.வி.பி. சினிமாவுடன்  ஷோபன் பாபு, கார்த்திக் ஆகியோரது பிக் பிரின்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

கதாநாயகி கதாப்பாத்திரத்தின் மேன்மையையும், தன்மையையும் ஒரு சேர நடிப்பில் வெளிபடுத்தக் கூடிய ஒரு நடிகையை தேடும்போது தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தவர்தான் கதாநாயகி நந்தினி.

‘கிரகணம்’ படத்தில் தனது அனுபவத்தை பற்றிக் கூறுகிறார் ஹீரோயின் நந்தினி.

“2010-ம் ஆண்டு ‘மிஸ் ஆந்திர பிரதேஷ்’ பட்டத்தை வென்ற பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தேன். பின்னர்,  தெலுங்கில் ‘மாயா’  மற்றும் கன்னடத்தில் ‘குஷி குஷியாகி’ ஆகிய படங்களில் நடித்தேன். ஆடிஷன் மூலம் இந்த ‘கிரகணம்’ படத்தில் தேர்வானேன்

தொடர்ந்து தீவிர நடிப்பு வகுப்புகள், வசன பயிற்சி, மற்றும் ஒத்திகைகள் மேற்கொண்டோம். இந்த நடிப்புப் பயிற்சி எனக்கு முற்றிலும் புதிதாய் அமைந்தது. தன் கனவுகளுக்கான தேடலில் குறிப்பாய் இருக்கும் ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இரு கதாநாயகர்களுக்கும் இணையாக என்னுடைய கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் இளன். பல்வேறுவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியது இந்த கதாப்பாத்திரம். பெரிய கார்பரேட் நிறுவனமான பி.வி.பி. சினிமா தயாரிக்கும் இப்படத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தில் அறிமுகமாவது எனது அதிர்ஷ்டம்..” என்கிறார் நந்தினி.

Our Score