full screen background image

“என்னுடைய குழந்தைக்கு சுந்தர்.சி.யின் பெயரைதான் வைத்துள்ளேன்..” – இயக்குநர் பாஸ்கரின் நன்றியுணர்ச்சி

“என்னுடைய குழந்தைக்கு சுந்தர்.சி.யின் பெயரைதான் வைத்துள்ளேன்..” – இயக்குநர் பாஸ்கரின் நன்றியுணர்ச்சி

அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள திரைப்படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

IMG (29)

இந்த விழாவில் நடிகர்கள் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி.கணேஷ், சிங்கம் புலி, யோகிபாபு, சிங்கர்பூர் தீபன், இயக்குநர் பாஸ்கர், தயாரிப்பாளர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

vaibhav-1

விழாவில் நடிகர் வைபவ் பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் குஷ்பூ அவர்களுக்கு நன்றி.  இந்தப் படத்தில் என்னுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவருமே பேய்களாக நடித்துள்ளனர். அதுவும் அழகான பேய்களாக நடித்துள்ளனர். இந்த அழகான பேய்களுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் அப்பாவியாக நான் நடித்துள்ளேன்.. நிச்சயம் படம் பார்க்கும்போது நீங்கள் என் மீது ரொம்பவே பரிதாபப்படுவீர்கள்..” என்றார்.

IMG (15)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இப்போது வாராவாரம் நிறைய பேய் படங்கள் வந்துக்கிட்டேயிருக்கு. ஆனால் இந்த படம் அது எல்லாவற்றிலும் முற்றிலும் புதுமையா இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தப் படத்தின் இடைவேளையில்தான் பேய் வரும். இது ஒரு கைபேசி பேய் கதை என்றுகூட சொல்லலாம்.

இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது படத்தின் இடைவேளை பகுதிவரையிலும் பேயையே காணோமே ஸார்ன்னு கேட்டேன். இடைவேளைக்கு பின்னாடிதாம்மா பேயா நீ வர்ற என்றார் இயக்குநர். முதல் பாதி முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும் இரண்டாம் பாதி முழுவதும் நம்மை மிரட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.

நான் இந்தப் படத்தில் முழு எனர்ஜியுடன் ஒரு சாவு வீட்டில் நடக்கும் குத்து பாடல் ஒன்றில் ஆடியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும்னு நினைக்கிறேன்..” என்றார்.

IMG (8)

நடிகை ஓவியா பேசும்போது, “நான் இந்தப் படத்தில் முதன்முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறேன். வைபவ் கூறியதுபோல் அழகான பேயாகத்தான் வருகிறேன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களுக்கும், இயக்குனர் பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்..” என்றார்.

நடிகர் வி.டி.வி.கணேஷ் பேசும்போது, “நான் பல்வேறு பேய் படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் முதல் முதலாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறேன். இது உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக இருக்கும்..” என்றார்.

நடிகர் யோகிபாபு, “நான் இதுவரையிலும் எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் முதல் தடவையாக இசை வெளியிட்டு விழா மேடையில் ஏறி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

IMG (42)

படத்தின் இயக்குநரான பாஸ்கர் பேசும்போது, “நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன். கடந்த பிப்ரவரி 20-ம் தேதியை என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும். இந்த நாளில்தான் இயக்குநர் சுந்தர்.சி.யிடம் இந்தக் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் அப்போதே ஓகே என்று சொல்லி இந்த படத்தை இயக்கித் தரும்படி சொன்னார். அப்படி என்னிடம் சொன்ன பிறகுதான் இரெண்டாம் பாதியின் மீதி கதையை கேட்டார்.

இயக்குநர் சுந்தர்.சி அவர்களிடம் கதை கூறிய பிறகுதான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என்று கூறலாம். என்னுடைய குழந்தைக்குக்கூட நான் என்னுடைய தயாரிப்பாளரான இயக்குநர் சுந்தரின் பெயரைத்தான் வைத்துள்ளேன். அந்தப் பெயரை வைத்ததும் அவர்தான்..” என்றார்.

IMG (24)

தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசும்போது, “இயக்குநர் பாஸ்கரை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில்தான் எனக்கு தெரியும். அவர் இயக்கியிருக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவரை வைத்து நான் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததும் அவர் என்னிடம் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்னும் கதையைத்தான் கூறினார்.

பிறகு ‘என்னிடம் ஒரு பேய் கதை இருக்கிறது’ என்று அவர் கூறியதும். அந்த கதையை டெவலப் செய்து கொண்டு வருவதற்கு பத்து நாள் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவர் மூன்றே நாட்களில் கதையை தயார் செய்து கொண்டு வந்து என்னிடம் பேசினார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரே ஒரு நாள் மட்டுமே நான் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றேன். அன்றைக்குக்கூட படத்தில் நடிப்பவர்களிடம் ஒரு மரியாதைக்காக ஹலோ சொல்லலாமே என்று நினைத்துதான் சென்றேன். படம் நன்றாக வந்துள்ளது. மக்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Our Score