full screen background image

ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம்

ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம்

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் நடிப்பில் உருவாகியிருக்கிறது One not Five Minutes என்ற திரைப்படம்.

இந்தப் படத்தினை Bommak Shiva  மற்றும் Rudransh Celluloid  இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சாம் C.S. இசையமைக்க, Kishore Boyipadu ஒளிப்பதிவு செய்துள்ளார். Raja Dussa இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இந்திய திரை வரலாற்றில், மூன்றாவது முறையாக,  ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், அந்த ஒரேயொரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப் படமும் ஒரே ஷாட்டில் வரும்படியான முதல் படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

இத்திரைப்படத்தில் மிகச் சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் மொத்தமாக 5-லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில்  20 நிமிடங்கள்வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு,  வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை சைனீஸ், கொரியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர்.

 
Our Score